ஒரே இலக்கத்தகடுகள் கொண்ட கார்கள் மீட்பு!

ஒரே இலக்கத்தகடுகள் கொண்ட கார்கள் மீட்பு!

தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் (CACAF) பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (13) கார்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளை சீ வீதியில் இருந்தும் மற்றைய வாகனம் தலுகம முதியன்சே வத்தையிலிருந்தும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரை இனங்கண்டு கொள்வதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் வாகனங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.