பாரவூர்தி - வேன் நேருக்கு நேர் மோதியதில் இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படுகாயம்.
இரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் இன்று பிற்பகல் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த இரண்டு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.