லஹிரு திரிமான்ன விபத்தொன்றில் காயமடைந்துள்ளார்!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்தொன்றில் காயமடைந்துள்ளார்.
அனுராதபுரம், திரிப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த வாகனம் பாரவூர்தியொன்றுடன் மோதுண்டதில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.