அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை!

அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை!

அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதிக் கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை அஞ்சல் மூலம் வெளியிடப்பட்ட  குறுஞ்செய்தி போலியானது என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

போலியான குறுஞ்செய்திகளை பொதுமக்களுக்கு அனுப்பி கடனட்டை தகவல்களை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு தங்களது ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக  தெரியவந்துள்ளது.