எக்காரணத்தைக் கொண்டும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது
எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போதிய எரிபொருள் நாட்டில் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.