'ஹரக் கட்டா'வுக்கு உடந்தையாக இருந்த பிறிதொரு பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'ஹரக் கட்டா' என்ற நந்துன் சிந்தக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து, அந்த சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நநிலையில், முன்னதாக, ஹரக் கட்டாவிடம் விசாரணைகளை முன்னெடுத்த ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்
இதேவேளை, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'ஹரக் கட்டா' என்ற நந்துன் சிந்தக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த காவல்துறை கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஹரக் கட்டாவின் கையில் போடப்பட்டிருந்த கைவிலங்கை அகற்றி அவர் தப்பி செல்வதற்கு முயற்சித்திருந்த நிலையில் குறித்த காவல்துறை கான்டபிள் கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.