பாப்பரசரின் இறுதி சடங்கு எப்போது? – வத்திக்கான் அறிவிப்பு

கத்தோலிக்க திருசபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்தது.
பாப்பரசர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம்.
இந்நிலையில், பாப்பரசரின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 சனிக்கிழமை நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது .