ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனுடன் உள்ளனர்!

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனுடன் உள்ளனர்!

உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்திற்கு இந்த நிலைமை வழிவகுத்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இந்த பிரச்சினையையும் தற்போது எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

190க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளை மையப்படுத்தி, குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1990 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், வயது வந்தவர்கள் மத்தியில் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.