உலகத் தமிழர் இயக்கம் ஐநாவில் முழக்கம்
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதன் துணை இராணுவமும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனப்படுகொலையை எமது தாயகத்தில் செய்து வருவது குறித்த விழிப்புணர்வை உங்களுக்கு ஏற்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
அக்டோபர் 2008 மற்றும் மே 2009க்கு இடையிலான 8 மாதங்களுக்குள் 175000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று அல்லது பலவந்தமாக காணாமல் போகச் செய்ததன் மூலம் இலங்கைப் பாதுகாப்புப் படைகளும் அதன் துணை இராணுவமும் தமிழ் இனப்படுகொலையை செய்தது.
OHCHR அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, எங்களுக்கு எவ்வித பதில்களும் இல்லை நீதியும் இல்லை! தமிழீழத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்னவென்று அறியக்கோரி வீதியோரப் போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன.
ஆயுதப்போரின் முடிவில் தமது உறவினர்கள் இலங்கை இராணுவக் காவலில் வைக்கப்பட்டதையோ அல்லது வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதையோ பல குடும்பங்கள் தங்கள் கண்முன்னே கண்டுள்ளனர்.
ஈழத்தமிழர்கள் சிங்கள துணை இராணுவத் தாக்குதலுக்கு தொடர்ந்தும் உள்ளாகிக் கொண்டுதான் உள்ளனர். உதாரணமாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காரணமாக தாக்கப்பட்டார். 12 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களை 36 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் சிவில் சமூகம் நினைவுகூருகிறது. திருகோணமலை கப்பல்துறையில் அவரின் நினைவூர்தி வாகனம் சிங்கள கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டது. சிறிலங்கா பொலிசார் அதி;ல் நின்ற போதிலும் கற்களாலும் மற்றும் பொல்லுகளாலூம் அவ்வாகனத்தின் மீது தாக்குதல் செய்தனர்.
இலங்கை தீர்மானங்கள் குறித்து முக்கிய குழு நாடுகளை நம்ப வைப்பதற்கும், இலங்கையை ஐசிசிக்கு பரிந்துரைப்பதற்கும், நிகழ்ச்சி நிரல் 4ன் கீழ் இலங்கைக்கான விசேட நாடு சார்ந்த அறிக்கையாளரை நியமிப்பதற்கும் என்ன செயல்முறை என்று பணிக்குழுவிடம் கேட்க விரும்புகிறேன்.
உக்ரைனுக்கு செய்தது போன்று விசேட அமர்வைக்கூட்டி, பொதுச்சபை மற்றும் மனித உரிமைகள் பேரவையை பயண்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.