வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – பொலிஸாரால் பதற்றம்!

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – பொலிஸாரால் பதற்றம்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் இன்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் அலெக்சாண்டர் வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொலிஸார் பங்கேற்பாளர்களை கலைக்க முயற்சிப்பதுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் காணொளியில் வெளியாகியுள்ளது.