கஹனவிடகே டொன் கந்தசேன கைது
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான கந்தசேன எனப்படும் கஹனவிடகே டொன் கந்தசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் தமது மனைவியுடன் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.