மது போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்!
மதுபான போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஸ்டிக்கர் முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.