அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று அரச தரப்பு அறிவித்துள்ளது.
இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும் அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அதேவேளை, “அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது