நாட்டில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை!

நாட்டில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (08) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று (08) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.