அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டண வசதி இன்று ஆரம்பம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டண  வசதி இன்று ஆரம்பம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.