மாடியிலிருந்து குதித்த 12 வயது சிறுவன் - வாழைத்தோட்டையில் சம்பவம்

இரண்டு மாடி வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன், அறையில் இருந்த ஜன்னலைத் திறந்து வெளியே குதித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனொருவர் தனது வீட்டிலிருந்து நண்பர்களுடன் பீர்சாய்பு வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். அந்த கடைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் இரும்புக் கேட்டை இந்த சிறுவர்கள் தட்டியுள்ளனர்.இதை அறிந்த வீட்டில் வசிக்கும் ஒருவர் கோபமடைந்து , சிறுவனை வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுவன் அறையில் ஒரு ஜன்னலைத் திறந்து தரையில் குதித்து பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த சிறுவன் தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.