ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்றாகும்.
அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாலை 5.00 மணி வரை இதை நடத்த தலதா மாளிகையால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
அதன் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், முதலில் ஜனாதிபதி “தலதா” புனித தந்த தாதுவை தரிசித்து மலர் வைத்து வழிபட்டார்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு புனித தந்த தாதுவை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.
இதற்கிடையில், புனித தந்த தாதுவை வழிபட வரும் பக்தர்கள் குப்பைகளை கவனக்குறைவாக வீசுவதன் மூலம் கண்டி நகரத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று மகா சங்கத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.