சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது குறித்த காணி ஆணைக் குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் தொடுத்த வழக்கிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இவனேசதுரை சந்திரகாந்தன் இதன்போது நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.