உலகிலேயே மிக குறைந்த சம்பளம் பெறும் இலங்கை மக்கள்!

உலகிலேயே மிக குறைந்த சம்பளம் பெறும் இலங்கை மக்கள்!

உலகிலேயே மிக குறைந்த சம்பளம் பெறும் நாடாக இலங்கை திகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக 105 நாடுகளை மய்யப்படுத்தி சிஈஓ வேர்ல்ட் இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன் பிரகாரம் உலக நாடுகளில் சராசரியாக அதிக தொகையான மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ளும் நாடாக ஸ்விஸ்ர்லாந்து பெயரிட்டுள்ளது.

அதன் தொகை 6142.1 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

சராசரியாக இலங்கை ரூபாயில் 19 இலட்சம் ஆகும் .

இந்த பட்டியலில் இறுதியாக 105வது இடத்தில் உலகிலேயே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்கள் உள்ள நாடாக இந்த இணையதளம் இலங்கையை பெயரிட்டுள்ளது .

இதன் பிரகாரம் இலங்கை ஒருவரின் சராசரி மாதாந்த சம்பளமாக 143.62 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கிறது . இலங்கை பணத்திற்கமைய, சுமார் 45,000 ரூபாயாகும்.