ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்!

சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன.
இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டும் வருகின்றன.
ஹொலிவூட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய விடயமாகும்.
இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பின்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான திரைப்பட வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.