அரச வேலை வாய்ப்பு என கூறி 14 பேரிடம் 42 இலட்சம் ரூபாய் மோசடி!

அரச வேலை வாய்ப்பு என கூறி 14 பேரிடம் 42 இலட்சம் ரூபாய் மோசடி!

பொது நிர்வாக அமைச்சில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் 14 பேரிடம் இருந்து 42 இலட்சம் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பொதுநிர்வாக அமைச்சின் கடிதத் தலைப்பில் போலியாக தயாரிக்கப்பட்ட கடிதங்களை பயன்படுத்தி குறித்த நபர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் 545 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.