மட்டக்களப்பில் காணி தரகர் ஒருவரின் மோசடி செயல்கள் அம்பலம்!

மட்டக்களப்பில் காணி தரகர் ஒருவரின் மோசடி செயல்கள் அம்பலம்!

மட்டக்களப்பு, ஊறணி, கொக்குவில் என்னும் இடத்தில் வசிக்கும் சீமேந்து கல் தயாரிக்கும் தொழில் புரியும் கந்தளாயை பிறப்பிடமாக கொண்ட சேகர் என்றளைக்கப்படும் நபர் மட்டக்களப்பில் காணி விற்றல் , வீடு வாடகைக்கு பெற்று கொடுத்தல் போன்ற இதர பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

சேகர் என்ற காணி தரகர் கடந்த மே 10ம் திகதி தன்னுடன் சேர்ந்து தரகு தொழில் புரியும் திருப்பெருந்துறையை சேர்ந்த விக்னராஜா என்பவருடன் மட்டக்களப்பில் காணி ஒன்றை விற்பனை செய்து கொடுத்துள்ளனர். 

பத்தாம் திகதி அக்காணிக்கு காணியை வாங்கிய நபரால் முற்பணம் வழங்கப்பட்டது. 

காணி உரிமையாளரான பெண் தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதன்  காரணமாக அந்த காணியை விற்பனை செய்துள்ளார்.

அவசரத் தேவை என்பதனால் காணியின் உண்மையான பெறுமதியை விட குறைந்த விலைக்கே இடைத் தரகரான சேகர் மூலம் காணியை விற்க முடிவாகியுள்ளது. 

ஆனால் தரகர் சேகர், காணி உரிமையாளரான பெண்ணை அவருடைய சகாவான தரகர் விக்னராஜா உடன் எச்சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை.

சேகருடைய சூழ்ச்சி வேலை தெரியாத குறித்த பெண்ணும் அவர் கூறிய விடயங்களை  நம்பி காணியை விற்க சம்மதித்துள்ளார். 

இதனடிப்படையில் காணி உரிமையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்பவர் தங்களுக்கிடையில் உடன்படிக்கையை மேற்கொண்டு ஒரு தொகுதி முற்பணம் கைமாற்றப்பட்டுள்ளது.

கடந்த 10ம் திகதி காணியை கொள்வனவு செய்தவர் மூலம் முற்பணம் வழங்கப்படுள்ளது. 

தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற இடைத்தரகரான தரகர் சேகர் தனது தரகுப் பணத்தை மன்றாடிப் பெற்றுள்ளார்.

ஆனால் காணியை கொள்வனவு செய்த நபரை சேகருக்கு அறிமுகப்படுத்தியது விக்னராஜா என்று மற்றொரு காணித்தரகர் ஆவார்.

அவர் அன்று வேறு விடயமாக தூரப்பயணம் மேற்கொண்டிருந்ததால் அந்த இடத்திற்கு வர முடியாமல் போயுள்ளது. 

காணி உரிமையாளரான பெண் தனது சாட்சிகளான தங்கைக்கும், தம்பிக்கும் முன்னிலையில் தான் இணங்கிய படி 5% என்ற அடிப்படையில் சேகரிடம் தரகுப் பணத்தை கையளித்துள்ளார். 

அங்கு இடைத்தரகரான சேகர் கபடத்தனம் செய்யப்போவதை காணி உரிமையாளரான பெண்ணோ, தூரப்பயணம் சென்ற பிரதான தரகரான விக்னராஜாவோ அறிந்திருக்கவில்லை.

குறித்த காணி கைமாற்றல் பணிகள் நிறைவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் காணியை வாங்கிய நபரிடம் இருந்து காணி உரிமையாளர் பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இடைத்தரகரான சேகர் முதன்மை தரகரான விக்னராஜாவிற்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று காணியை பெற்றவர் கூறியுள்ளார்.

இதனையறிந்த அப்பெண் தன்னுடன் கொடுக்கல் வாங்கல்களை கையாண்ட இடைத்தரகர்  சேகருக்கு உண்மை நிலையை அறிந்து கொள்ள தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேகரிடம் முதன்மை தரகரான விக்னராஜாவின் தொலைபேசி இலக்கத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சேகர் அவருடைய இலக்கம் வேலை செய்யவில்லை என்று கூறியதும் சந்தேகம் அடைந்த பெண் காணியை வாங்கிய நபரிடம் இருந்து விக்னராஜாவின் இலக்கத்தை பெற்று அவருடன் பேசிய பின் தான் சேகரின் கபட நாடகம் அம்பலமாகியது. 

அது மட்டுமன்றி இடைத்தரகர் சேகர் நேரடி சந்திப்புகள் எதனையும் மேற்கொள்ளாமல், தொலைபேசியில் மட்டும் பேசி காணியை விற்று கொடுத்தவர். 

காணி உரிமையாளரான நோயாளி பெண்ணை தர குறைவாகவும் கேவலமான தொழில் செய்பவள் என்றும் பைத்தியகாரி என்றும் முத்திரை குத்தி விக்னராஜாவிடம் பேசி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

அது மட்டுமன்றி விக்னராஜா 3% தான் தரகு கூலி பெற சொல்லியுள்ளார் அதை கூட மறைத்து முழுப்பணத்தையும் 5% படி பெற்றதும் இல்லாமல் தன்னை நம்பிய சகாவிற்கும் காணி உரிமையாளர் பெண்ணுக்கும் துரோகம் செய்துள்ளார். 

முதன்மை தரகரான விக்னராஜா 28.05.2024 மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்த போதும் பொலிஸாரின் அழைப்பையும் ஏற்காத சேகரும் அவருடைய குடும்பமும் தொலைபேசியையும் நிறுத்தி வைத்து விட்டு விசாரணைக்கு மதிப்பளிக்காது இருந்துள்ளனர். 

இதிலிருந்து சேகர் மட்டுமன்றி முழு குடும்பமுமே நயவஞ்சகர்கள் நேர்மையற்றவர்கள் என்று தெரியவருவதாக பாதிக்கப்பட்ட இருதரப்பினரும் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

'மட்டக்களப்பு வாழ் மக்களே உஷார் ஆகுங்கள் இந்த காணித் தரகர் சேகர் என்பவர் மூலம் எந்த காணியையும் விற்கவோ வாங்கவோ வேண்டாம். தன் தரகு பணத்துக்காக எந்த எல்லைக்கும் போக கூடியவன்.

இப்படியானவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மட்டக்களப்பில் உள்ள காணி தரகர்களே இவனுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டாம்.

அத்துடன் தனது வீட்டு வாயிலில் காணிகள்/வீடுகள் வாடகைக்கு/உரிமைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற விளம்பரத்தையும் வைத்து இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டு வருவதாக' பாதிக்கப்பட்ட தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த இடைத்தரகரான சேகருடன் எமது செய்திச் சேவை தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் அவர் அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.