வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு 2,148 தசம் 6 மில்லியன் ரூபா வருமானம்!

வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இரண்டாயிரத்து 148 தசம் 6 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.

அந்த அமைச்சின் கீழுள்ள வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய விலங்கியல் திணைக்களம் ஆகியவற்றின் அறிக்கைகளின் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆயிரத்து 612 மில்லியன் ரூபாவையும், வன பாதுகாப்பு திணைக்களம் 99.9 மில்லியன் ரூபாவையும் தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம்; 436.7 மில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளன.

வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு கடந்த 2022ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 501 சதம் 64 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியிருந்தது.

இந்தநிலையில், குறித்த அமைச்சின் இந்த ஆண்டின் மொத்த வருமானம் கடந்த வருடத்தை விடவும் அதிகமாக இருக்கலாம் எனவும் அந்த திணைக்களங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.