விஜயின் குரலில் 'தி கோட்' படத்தின் முதல் பாடல்!

விஜயின் குரலில் 'தி கோட்' படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் 'தி கோட்' .

குறித்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் முதலாவது பாடல் இன்று வெளியாகும் என திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

தளபதி விஜய் பாடியுள்ள குறித்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.