நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
நாமல் ராஜபக்ச கட்சி ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச
ஆனால் இங்கு இது போன்ற விடயங்களில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்த போது
“தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜானக வெலிவத்தவின் வீட்டிற்கு வந்ததாகவும், அதன்படி அங்கு தேநீர் வைபவத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் பலர் தம்மை சந்திக்க வந்ததாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.