ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் மீட்ப்பு!

ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் மீட்ப்பு!

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை  முற்றுகையிட்ட  பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடாவுடன் மூன்று பரல்களையும் மீட்டுள்ளனர் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல்  பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக ஒட்டுசுட்டான் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இத் தகவலின் அடிப்படையில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  தலைமையில் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 475 லீற்றர் கோடாவுடன் மூன்று பரல்கள் கோடாவினையும் சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு சிவநகர், மந்துவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 37, 55 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.