டயனா கமகே பற்றிய அறிக்கை சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும்!

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) சபைக்கு அறிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மோதலொன்று இடம்பெற்றதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ, குறித்த அறிக்கையை நேற்று சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.