ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இது சூறாவழியாக வலுவடையும் சாத்தியம் குறைவாக இருப்பதாகவே தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 240km தூரத்திலும்
காங்கேசன்துறையில் இருந்து கிழக்காக 290km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது வடக்கு திசையில் தமிழ்நாட்டின் கரையோரத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு செல்கின்றது.
நாளை முதல் இலங்கையில் இதன் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
வடமாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு, சப்ரகமுவ, வடக்கு மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் காலி, மாத்திறை மாவட்டத்தின் சில பகுதிகளும் அவ்வப்போது மழை காணப்படும்.
நாட்டின் ஏனைய சில பிரதேசங்களில் மாலை வேலைகளில் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
வடக்கு, வடமேற்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, தெற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் இடையிடையே 60km/h முதல் 70km/h வரையான வேகத்தில் பலமான காற்று வீச கூடும்.
கடல் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில்,
இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், கடல் பிராந்தியத்தியங்களில் காற்றானது வடமேற்கு அல்லது மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 40km/h - 50km/h வேகத்தில் காற்று வீசும்.
இந்த காற்றின் வேகமானது புத்தகம் முதல் மன்னார், காங்கேச்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, ஊடான மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்துக்கு 60km/h - 70km/h அதிகரித்து வீச கூடும்.
மட்டக்களப்பு முதல் திருகோணமலை முல்லத்தீவு ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5m முதல் 3m வரை உயர்வடைய கூடும்.
எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் இந்த கடல் பிராந்தியங்களில் துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.