காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளது - எச்சரிக்கை!

காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளது - எச்சரிக்கை!


இலங்கையில் கடந்த சில நாட்களாக கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) முதல் பனிமூட்டம் போன்ற நிலை உள்ளதுடன், பல பகுதிகளில் இன்னும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரச் சுட்டெண் இன்றைய நிலவரப்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 15 நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 101-150க்கு இடையில் சற்று சாதகமற்றதாக முறையில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 0-50 சாதாரணம் எனவும், 101-150 என்ற மதிப்பு ஆரோக்கியமற்ற தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.

If you noticed a gloominess in the Air island-wide, Beware... It's not Fog.  : r/srilanka

Drop in air quality in several parts of Sri Lanka - Newswire