இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது!

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 626 பேரும், குற்றப்புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 245 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 5 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 14 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.