மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது!
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்மவிபூஷண் விருதும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருதும், நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷண் விருதும், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்படுகின்றன.
Update :
மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டமை தொடர்பாக, அவரது மனைவி பிரேமலதா தெரிவித்த கருத்துகள்:-
விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம்.
விஜயகாந்த் இறந்து 30 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு இதனைக் கொடுக்கிறது.
விஜயகாந்த் மீது அன்பு கொண்டவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறோம்.