பெண்மீது சினிமா பாணியில் பொலிஸார் கடூழிய தாக்குதல் - கோடீஸ்வரன் எம்.பி காட்டம்!
அண்மையில் பெரியநீலாவணை பொலிஸாரினால் அதே இடத்தில் வசிக்கும் பெண்மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சினிமா பாணியில் கடூழிய தாக்குதல் நடத்தியுள்ளதாக நாடாளுமன்றில் திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியநீலாவணையை சேர்ந்த றிலா என்னும் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பொலிஸ் நிலையத்தை பூட்டிவிட்டு தகாத முறையில் பேசியது மட்டுமில்லாமல் அவர்களை கடுமையாகத் தாக்கியதுடன், வன்புணர்வுக்கு உள்ளாக்கின்ற முறையிலே அப்பெண்ணின் மார்பகங்கள், பின்புறம் ஆகியவற்றில் வன்முறையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பொலிஸாரின் இச்செயலானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்றும், "கிளீன் ஶ்ரீலங்கா" என்று கூறுவது பொலிஸார் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட கடூழிய செயலையா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்குப்பதிளளித்த பொதுப்பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால, இவ்விடயம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு தங்களிடம் கேட்டிருந்தோம்.
தங்களால் கூறப்பட்ட விடயத்திற்கு அமைவாக உடன் விரைந்து இப்பிரச்சினையை அதிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறினார்.
அமைச்சர் இது பற்றி கோடீஸ்வரன் எம்.பியிடம் மேலும் கூறுகையில் நீங்களும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் "கிளீன் ஶ்ரீலங்கா" திட்டத்தை இதனுடன் சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம்.
அப்பிரச்சினைக்கான தீர்வை நான் நாளை உரிய நடவடிக்கையை மேற்கொண்டு பெற்றுத்தருவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.