புதிய நாடாளுமன்ற உறுப்பினரை வசைபாடி தாக்க முயன்ற அங்கஜனின் தந்தை ராமநாதன் (Video)!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட காணொளியொன்று வைரலாகி வருகின்றது.

ராமநாதன் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமில்லாத பலரது காணிளை அத்துமீறி தன்வசப்படுத்தியுள்ளார் என்பது இந்த வாக்குவாதத்தின் போது தௌிவாகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார தோரணையில் பதிலளிப்பது மட்டுமல்லாமல், ஓரிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்குவதற்கு முயற்சிப்பதும் காணக்கூடியதாக உள்ளது.

முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் அங்கஜன், அமைச்சுப் பதவியொன்றில் இருந்த காலத்திலும், அவரது தந்தையான ராமநாதனே அதிகார துஸ்பிரயோகங்களை மேற்கொண்டமை யாவரும் அறிந்த விடயமே.

இந்த காணொளியில் அவர் நடந்துகொள்ளும் விதமும் அவ்வாறே உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வௌ்ளவத்தைக் சந்தைக்கு அருகாமையில் அங்கஜன் சம்பந்தப்பட்ட செய்தியொன்றை பிரசுரித்தமைக்கான ஊடகவியலாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் அதிகார தோரணையில் சரமாரியாக தாக்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.