நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காற்றின் தரம் 32 தொடக்கம் 80க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமானதாக இருக்கும் என்றும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது