மெக்சிகோவில் வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பலி!
மெக்சிகோவின் பாப்லோ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
எரிவாயு கசிவு காரணமாக குறித்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வெடி விபத்து காரணமாக 30 முதல் 50 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன