பிரித்தானிய இளவரசி Anne நாளை இலங்கை வருகை!

பிரித்தானிய இளவரசி Anne உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

பிரித்தானிய இளவரசி Anne நாளை  இலங்கை வருகை!

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய அவர் இங்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது பிரித்தானிய இளவரசியின் கணவர், வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸும் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்கள் கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.