தையிட்டியில் தொடரும் போராட்டம்

தையிட்டியில் தொடரும் போராட்டம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணிகளைப் பூர்வீக உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தையிட்டியில் நேற்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த போராட்டம் இன்று மாலை 6 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறுகின்ற போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது