உலகளாவிய தொழில்நுட்ப கோளாறு - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிக்கை!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய தொழில்நுட்ப கோளாறு - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிக்கை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய முன்பதிவு சேவைகளை பாதிக்கும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களின் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (19) விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2:00 மணியளவில், தொழில்நுட்ப கோளாறு முழுமையாக மீளமைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் ​மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக உதவிகளுக்கு, தயவு செய்து தங்கள் உலகளாவிய தொடர்பு மையத்தை +94 19733 1979  தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கோரியுள்ளது.

அதேவேளை, இன்று மாலை வரை பல நாடுகளில்  தொழிநுட்ப பிரச்சினை நீடித்ததாக பி.பி.சி. ஊடகம் ​செய்தி வௌியிட்டுள்ளது.

குறிப்பாக விமானப் போக்குவரத்து, தகவல்தொடர்பு, ​தொலைக்காட்சி சேவைகள், மருத்துவ வ​லையமைப்பு, ரயில்சே​வைகள், வர்த்தக ​நி லையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, மலேசியா பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தொழிநுட்ப வலையமைப்புகள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Crowdstrike, அதன் மென்பொருள் புதுப்பிப்புகளின் ஒன்றில் "கோளாறு" ஏற்பட்டு விண்டோஸ் இயங்குதளத்தைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது..

பாரிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்புகள் உலகம் முழுவதும் உள்ள தொழில்களை பாதித்துள்ளன. 

கிட்டத்தட்ட 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் வங்கி, சுகாதாரம் மற்றும் வர்த்தக சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒரு சில திருத்தங்கள் மேறகொள்ளப்பட்டுள்ளதுடன், ஆனால் கணினிகள் முழுமையாக காப்புப் பிரதி எடுக்கப்பட்டு இயங்குவதற்கு "சிறிது நேரம் ஆகலாம்" என்று பெரு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.