பொதுத்தேர்தலில் நடிகை தமிதா போட்டியிடுவதாக அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவதாக நடிகை தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர் நேற்று (08) செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
இது தொடர்பில் தமிதாவிடம் வினவியபோது, துன்பப்படும் மக்களுக்காக சில பணிகளைச் செய்யவே எனவும் மக்கள் மற்றும் கலைஞர்களின் பிரச்சனைகள் குறித்து தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.