ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருக்கும் வழக்கில் ஞானசார தேரர் இன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தராததால் அவருக்கெதிராக கோட்டை நீதிமன்ற நீதவான் தனுஜா ஜயசிங்ஹ பிடியாணை பிறப்பித்தார்.
2014 ஆம் ஆண்டு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் இச்சம்பவம் இடம்பெற்றது.