கோவிட் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

கோவிட் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டில் கோவிட் பெருந்தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு கடந்த காலங்களைப் போன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிமோனியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மட்டும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நாட்டில் தொடர்ந்தும் கோவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் கோவிட் தொற்றாளிகள் காணப்படுவதனால் தாங்களே சுய பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று தற்பொழுது உலகில் சாதாரண ஓர் நோயாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோயாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலவிய காலப் பகுதியைப் போன்று தற்பொழுது கிராமிய மட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என டொக்டர் அசேல தெரிவித்துள்ளார்.