ரோட்டரி 32/20 கொழும்பு தெற்கு கழகத்தின் அனுசரணையில் இலவச இருதய சத்திர சிகிச்சை!

ரோட்டரி 32/20 கொழும்பு மேற்கு கழகத்தின் அனுசரணையில் 'குழந்தைகளின் உயிரை காப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கான இலவச இருதய சத்திர சிகிச்சைகள் கடந்த 6 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன் ஓர் அங்கமாக இம்மாதம் இருதய சத்திரசிகிச்சைக்காக 6 சிறுவர்களும் பயிற்சிகளுக்காக 10 தாதியர்களும் இந்தியாவின் கொச்சி நகரிலுள்ள பிரபல 'அம்ரிதா' இருதய சத்திர சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இவ்வாறு சத்திர சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 6 சிறுவர்களும் தாதியர்களும் பெற்றோர் சகிதம் அங்குச் சென்று வெற்றிகரமாக சிகிச்சைகளை நிறைவு செய்து இன்றைய தினம் (06) இலங்கை வந்தடைந்தனர்.

இவர்களை மேற்படி இலங்கை ரோட்டரி வட்டாரத்துக்கான முன்னாள் ஆளுநர் செபஸ்டியன் கருணாகரன் தலைமையிலான கழக உறுப்பினர்கள் நேரடியாக சென்று வரவேற்றனர்.