பிரித்தானியவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள்

பிரித்தானியவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள்

யூலை 05 கரும்புலிகள் நாள்.
இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுத்தவர்களுக்காக தம்மை தியாகம் செய்கின்ற வீர மறவர்களை போற்றி வணங்கும் புனித நாள்.

அத்தகைய காவிய நாயகர்களான கரும்புலிகளை நினைவுகூறும் நிகழ்வானது நேற்று 05.07.2024 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றிருந்தது.

பிரித்தானிய தமிழர்களால் குறைடன் பகுதியில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ தேசியக் கொடியேற்றளுடன் இந் நிகழ்வு ஆரம்பமானது அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

தொடர்ச்சியாக 
கரும்புலிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொது மக்களினால் மலர் வணக்கம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றருந்தது.

கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழுடன் வாழும் என்கின்ற எமது  தேசிய தலைவரின் வார்த்தைக்கிணங்க கரும்புலிகளின் தியாகங்களை கவிதையாகவும் சிற்றுறையாகவும் அத்தோடு சிலர் அவர்களுடனான தம் அனுபவங்களையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இறுதியாக தமிழீழ தேசியக்கொடி கையேந்தப்பட்டு  உறுதி மொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.