"சொர்ணம்" சொல்லும்போதே கர்வமும் வீரமும் பிறப்பிக்கும் பெயர்!

"சொர்ணம்" சொல்லும்போதே கர்வமும், வீரமும் பிறப்பிக்கும் பெயர். படைத்துறைக்கே உரித்தான அறமும், ஆளுமையும் கொண்டமைந்த வீரத்தளபதி.

"சொர்ணம்" சொல்லும்போதே கர்வமும் வீரமும் பிறப்பிக்கும் பெயர்!

இரண்டாம் ஈழப்போர் (1990) தொடக்கம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையான சிங்களப் படைகளுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் பாரிய வலிந்த தாக்குதல்கள் மற்றும் எதிர்ச் சமர் நடவடிக்கைகளில் பெரும்பாலானவை தளபதி சொர்ணம் அவர்களின் தலைமையிலும், பங்களிப்பிலுமே வெற்றிப்படிகளை தொட்டன என்றால் மிகையில்லை.

எமது விடுதலைப் பயணத்தில் சூழ்ந்து கொண்ட இரு பெரும் துரோகங்களையும் களைந்த பெரும்பணிகளிலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

தமிழீழத்தில் இவனின் கால்பதியாத பகுதிகளே இல்லை எனும் அளவிற்கு அத்தனை மாவட்டங்களிலும் தடம் பதித்து, வரலாறு படைத்த மாபெரும் தளபதி. 

தரைப்படை, கடற்படை, வான்படை என தமிழனின் முப்படைகளையும் வழி நடாத்திய பெருமைக்குரிய ஒரே தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் திகழ்கின்றார். 

விடுதலைப் புலிகள் அமைப்பில் படை நடத்தும் தளபதிகளுக்கு நிலைகள் வழங்கப்பெற்று, அழைக்கப்படாத ஆரம்ப காலங்களிலேயே (1991) சிங்கள படைத்துறை ஆய்வாளர்களாலும், சிங்களப் படையினராலும் "பிரிகேடியர் சொர்ணம்" என அடையாளப்படுத்தப்பட்டவர் திரு. சொர்ணம் அவர்கள். 

அழகிய புன்முறுவலுடன், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன், புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன். 

"எங்கள் திமிரின் அடையாளம்" பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாளில் (15.05.2023), அவருக்கு என் சிரம் தாழ்த்திய வீரவணக்கம். 

Thank you Soori Sinnathurai