சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திய தூதரக அதிகாரி உறுதி!

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திய தூதரக அதிகாரி உறுதி!

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்குமாயின் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரி தமக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் தாம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்றைய தினம் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தனை இலங்கை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தமக்கு அறியப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சினுடைய சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.