அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு மிகுந்த அவதானத்துடன் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் புதிய உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.