இஸ்ரேலிய, ஹமாஸ் முறுகல் நிலை - இதுவரை 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான முறுகல் நிலை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 20000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மோதல் ஆரம்பித்ததில் இருந்து பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை, ஹமாஸ் மற்றும் எகிப்திற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன், காசாவில் அவசர மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கான அழைப்புகளை ஐக்கிய நாடுகள் சபை ஒத்திவைத்துள்ளது.