நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.