மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழப்பு!

 மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் வீதி விபத்துக்களினால் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் விபத்துக்களில் 12,000 பேர் உயிரிழக்கின்றனர். அவற்றில் நான்கில் ஒரு பகுதியினர் வீதி விபத்துக்களாகும். 

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 7-8 பேர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 

அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்களாகும். அத்தோடு 18-28 வயதுடைய இளைஞர்கள் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணமென பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.