தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த போது பாதாள உலக வன்முறைகள் அதிகரித்து வருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நிலவும் நெருக்கடியானது பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதலே என தெளிவுபடுத்திய ஜனாதிபதி, நிலைமையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.